அன்பு!
அன்பின் வழியில் அமைவது வாழ்வதாம்
பண்பின் நிலையதும் சிறப்பு.
அன்பே அருளும் அழகும் அணியும்
அருமருந்தும் அஃதே பிணிக்கு.
அன்பில் இணையும் அகிலம் ஒருங்கியும்
இன்பம் விளைக்கும் பேறு.
கலகம் மறந்து கடமை உணர்ந்து
கழகம் அமையும் அன்பு.
அன்பில் விளைந்திடும் ஆருயிர்க் காதல்
இன்பம் தொடர்ந்திடும் சீர்.
அன்பின் ஒளியில் அகன்றிடும் பேதமை
துன்பம் துடைத்ததுப் போம்.
அன்பே இறையென ஆற்றிடும் பக்தியாம்
மன்னுயிர்க் கெல்லாம் துணை.
பழகும் அன்பும் பரவும் உறவும்
வரவதில் வாழும் உலகு.
அன்பில் நிறைந்த.அருளுறை
உள்ளம்
ஒன்றிலே இல்லையே கள்ளம்.
அன்பதன் ஆண்டான் அனைத்தான் இயற்கை
மன்னுயிர் காப்பனே காப்பு,
கொ.பெ .பி.அய்யா.
No comments:
Post a Comment