Sunday, 22 December 2013

காறறே நீ வாழ்க!

காற்றே நீ வாழ்க!!

ஊதல் காற்று சாரல் தூவி
காதல் கூட்டல் நேரல் மேவி
நுழைந்திடை அடைத்து
நிறைந்திடை திணறி
பிதுங்கவும் பதுங்கவும் மறந்து
வெதுப்பினில் வியர்த்தும் நீர்வயோ!

விலகச்சொன்னதும் கோபமோ!
பழகிட அவள்மேல் தாகமோ!
பாவாடையுள் நீ ஒளிந்தாயோ!
பாவியென்ன தான் செய்தாயோ!

குடையெனக் குவிந்தது பாவாடை,
எடையுங் குறைந்தது பறந்தாடை
விடை நிறைத்தாயோ காதலுக்கு!
தடை யினியேது வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment