காதல் வாழ்கிறது..
காதலைப் பாடினால் தான்
காது கொடுத்துக் கேட்கின்றனர்.
காதலைப் பேசி னாலும்
கவனத்தைப் பதிக் கின்றனர்
காதலை எழுதி னால்தான்
கதை யதனை இரசிக்கின்றனர்
காதலைப் பார்ததால் ஏனோ
கனலாகி எரி கின்றனர்..
காத்ல் என்பதே வெறுங்
கற்பனையில் மட்டுந் தானா?.
காதல் என்பது நிஜமில்லையா?
காலம் அதை நம்ப வில்லையா?
காதல் மீது ஏனிந்தக் கசப்பு?
கடந்து வந்த பாதை பிழையானதா?
இத்தனை கேள்விகளை ஏவினாலும-
இதயங்களில் இன்னுங் காதல் வாழ்கிறது..
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment