Saturday, 21 December 2013

பெண்ணா பாபர் மசூதியா?

பெண்களென்ன பாபர் மசூதிகளோ!

பெண்களென்ன பாபர் மசூதிகளோ
ஆண்களெம்மை இடிப்பதற்கோ!
இடிக்கத் துணியும் ஆண்களோ!
கட்ட மட்டும் மறுப்பதேனோ!

பெண்களென்ன தங்கமென்றோ!
ஆண்களெம்மை  உரசவென்றோ!
பொன்னாகப் பிறக்கலையோ!
கண்ணீரை உதிர்ப்பதற்கோ!!

பெண்களென்ன சிலைகளோ!
ஆண்களெம்மை இரசிப்பதற்கோ!
அரங்கேறாக் கலைகளாமோ
அறை முடங்கி அழிகிறோமோ!.

பெண்களென்ன புறம்போக்கோ!
ஆண்களெம்மை மேய்வதற்கோ!
தரிசாகிப் போவோமோ!
கருகித்தினம் சாவோமோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment