ஸ்ரீ தேவி பத்திரகாளி !
கொல்லம்பரும்பு வாழும் தேவி
வல்ல குலப் பத்திரகாளி
நல்ல வழி காட்டி நீயே
நாளும் துணை செய்வாய் வாழி!
வணிகத் தொழில் செய்து வாழும்
புனித அன்னை உனது குலம்,
இனிய தமிழ் நாடார் நலம்
நனி பெருமை காப்பாய் வளம்.
உனதருள் பெற்றதாலும்
உலகெலாம் கற்றதாலும்
தனது நிலை நற்றாண்டும்
தர்மம் நாளும் போற்றுகிறோம்.
துலாக் கோல் வரம் தந்தாய்.
கலாவள்ளி திறம் ஈந்தாய்.
விலாசமே நீ ஆனாய்
கலாபமாய் காக்கின்றாய்.
எம்மைத் தினம் காக்கின்றாய்.
நன்மை மணம் சேர்க்கின்றாய்.
உம்மை மனம் குளிர்விக்க
செம்மை கனம் நிற்கின்றோம்.
வாழ வைக்கும் அம்மை நின்
தோள் அமைக்கும் கிளியாம் தன்
கால் பதிக்கும் கருணை எம்
கோள் விலக்கி அருள்வாயே!
செழுமை எம்மை சீராக்கி
வளமை தம்மை வாழ்வாக்கி
எளிமை கம்மை எமையாக்கி
வலிமை இம்மை செய்வாயே!
அறம் தழைய ஏவியே!
அறம் கண்டாய் எம்மையே!
அறம் போற்றுங் காளியே!!
அறம் ஏற்றி வாழியே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment