Sunday, 22 December 2013

இளங்காலை.

காலைப்  பொழுது.

சின்னஞ் சிறு பொழுது,,
சேவல் கூவி எழுப்புகிறது.
கண்ணங் கருமை கரைகிறது,
கதிரவன் வரவு வளர்கிறது.

ஊதல் காற்று இதமாக,
உலாவும் கீற்று இசையாக,
குயில்கள் பாட்டும் இரசமாக
மயில்கள் ஆட்டம் வசமாக..
நனைந்தும் பனியில் மலர்களோ
நடுங்கும் இரவுடன் கலந்ததோ!
மெல்லவே இருளின் போர்வையோ
கள்ளமாய் விலகிக் கலையுதோ!

மங்களப்  பாவையர்,திங்களோ!
மஞ்ள்  பூசி நீராடி
ஞாயிறை வாசல் வரவேற்போ!
பாவரைக் கோலம் அணிவகுப்போ!

ஆழ்ந்த களைப்பு உறக்கம்தான்.
ஆதவன் விழித்துச் சிவந்தெழுந்தான்.
வாழ்த்தும் ஊரரம் பாடென்றான்.
வாழ்வின் ஆதாரம் தேடென்றான்ன்.

கொ.பெ..பி.அய்யா.








No comments:

Post a Comment