Sunday, 22 December 2013

பிரிவின் கொடுமை

பிரிவின் கொடுமை.

என்ன என்ன எண்ணு கின்றாள்?--என்னை
உண்ணும் பார்வை கண்கள் கசிந்தாள்.
கன்னம் தேய்த்து கதவு சாய்ந்தாள்.

உறவைப் பிரிந்தும் பறக்கும் தயக்கம்--கொடும்
பிரிவை நினைந்தும் பரவும் மயக்கம்.
சிறகை முடக்கி சிரித்தாள் அடக்கம்.

இதயம் துடிப்பது எனக்கும் கேட்கிறது--பாவம்
அதையும் நடிப்பது அவசியம் ஆகிறது.
புதையும் உதடுகள் பொறுமை தேர்கிறது.

விழிகளில் நீரனுப்பி  விரைவிலே வாவென்றாள்--விழி
வழிவதும் ஆறியும் முறுவலை பூக்கின்றாள்.
வழியதும் தேறவும் மொழியதில் நோக்கின்றாள்.

கருங்குழல் பின்னலை ஒருமுறை சொன்னதை-நெஞ்சம்
இருமுறை தட்டியே வருடியும் கன்னத்தை
இருத்துகிறாள் தன்னையே பொருத்தியும் எண்ணத்தை.

அத்தனைக்கும் பதிலாக ஆகட்டும் நலமாக--நான்
எத்தனைக்கும் இதமாக ஏகட்டும் வரவாக!
நித்தினைக்கும் பிரிவாக நீங்கவோ மரமாக!


கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment