Sunday, 22 December 2013

நிலாச்சோறு.......குழந்தைப்பாடல்.

நிலாச்சோறு (குழந்தைப் பாடல்) 

நிலா வருது பாரடியோ!
நிறுத்தி.அதனைக் கேளடியோ!.
உலா போவது எங்கடியோ!
உன்னைச் சேர்க்கச் சொல்லடியோ.!

உணவு உண்ணு  சீக்கிரம்.
உனக்குப் பாட்டுச் சொல்லிடும்
தின்னச் சீனி மிட்டாயும்
தினமும் வாங்கித் தந்திடும்..

தேடித் தேடி உன்னையே
ஓடி ஓடி வருகுதே..
கூடி விளையாடத் தானுமே..
கூப்பிடுமே சாப்பிடேன்

உணவு உண்டால் வளரலாம்.
உலகம் சுற்றிப் பார்க்கலாம்.
பாட சாலை போகலாம்.
பாரை ஆள ஆகலாம்.

அதோப் பாரு வருகுதே..
இதோப் பாரு சிரிக்குதே.
உன்னைத் தானே பார்க்குதே!
அன்னம் உண்ணச் சொல்லுதே.

பாலுஞ் சோறு கொண்டுமே
பாப்பபா உன்னைத் தேடுதே.
சோர்ந்து போச்சோ காணோமே!
தீர்ந்து ஆச்சே கிண்ணமே!


கொ.பெ.பி.அய்யா.
===================================================

No comments:

Post a Comment