.பூனைக்குட்டி(குழந்தைப் பாடல்.)
மியா மியாப் பூனைக்குட்டி
பயந்துட்டயோ பாலக்கொட்டி!
ஓடாதடி அம்முக்குட்டி
வாடிகிட்டே செல்லக்குட்டி.
எனக்கு வச்ச பாலுதான்.
எடுத்துக்கோடி பானுதான்..
உனக்கு எனக்கு என்னடி!
கொடுக்கத்தான சொந்தந்தான்.
கொடுக்கத்தான சொந்தந்தான்.
சேர்ந்து நாமும் கேட்பமா?
தீர்ந்து போச்சா பார்ப்பமா?.
அம்மா நம்ம அம்மாதான்.
சும்மா கொஞ்சம் கோவந்தான்.
பார்த்துப் பார்த்துக் குடிக்கிறாய்..
பாவம் போல நடிக்கிறாய்.
சேர்த்துக் கொள்ள சொல்கிறாய்.
தீர்த்து எங்கே ஓடுகிறாய்.
திருடிப் பிழைக்கக் கூடாது.
வருந்தும் பகையும் ஆகாது.
உலகில் எல்லாம் சொந்தமே.
உயிர்கள் கொல்லல் பாவமே.
திருடிப் பிழைக்கக் கூடாது.
வருந்தும் பகையும் ஆகாது.
உலகில் எல்லாம் சொந்தமே.
உயிர்கள் கொல்லல் பாவமே.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment