Sunday, 22 December 2013

காந்தி தாதா.....குழந்தைப்பாடல்.

காந்தித்தாத்தா (குழ்ந்தைப்  பாடல்)

காந்தித் தாத்தா.

காந்தித் தாத்தா பார் பாப்பா.
சாந்தம் நேர்த்தி தான் பாப்பா
சட்டை அணியா ஏழைத் தாத்தா.
சட்டம் படித்த மேதைத் தாத்தா..

வெள்ளையரை வென்றவர் இவர்தான்.
விடுதலையைப் பெற்றவர்  இவர்தான்.
அகிம்சை வழியை கண்டவர் இவர்தான்.
அகிலம் விழிக்க செய்தவர் இவர்தான்.

உழவன்  நிலையைப் புரிந்த மனிதர்.
உரிமைக் குரலை தொடுத்த புரட்சியர்.
கிராமங்களைப் பார்த்து அறிந்தவர்.
இராம இராஜ்யம் ஆக்கத் துணிந்தவர்.

ஏழைக்காகப்  பிறந்த தந்தை.
ஏழையாக வாழ்ந்த சிந்தை.
இராட்டை கற்றுத் தந்த ஆசான்.
நாட்டை ஏற்ற வந்த தேசான்.

கோட்டையாள தவிர்த்த அண்ணல்.
கேட்டை தீர நிமிர்த்த செம்மல்.
நாடும் காடும் நடந்த மகான்.
கோட்டும் சூட்டும் மறந்த சகான்.

இந்தியாவைக் காத்த தாத்தா
இறைவனாகி காக்கும் பார்த்தா.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
இராகம்தான் தினம்நம் சாந்தி.                    

தர்மராக வாழ்ந்த தெய்வம்.
சர்வமதமும் தேர்ந்த மெய்யன்.
தீண் டாமை வஞ்சம் தீர்த்த சாமி
ஆண்டெம்மை நெஞ்சம் ஆற்றும் இராமன்.

கொ.பெ.பி.அய்யா,




No comments:

Post a Comment