ஆட்டுக்குட்டி(குழந்தைப் பாடல்)
சின்னச் சின்ன ஆட்டுக்குட்டி
சிங்கார ஆட்டுக் குட்டி.
குதித்துக் குதித்து துள்ளுது.
குட்டிப் பாப்பா ஆட்டுக்குட்டி.
முட்டி முட்டி அம்மாவை
முத்தம் இட்டுக் கேட்குது..
புட்டி இன்றிப் பாலினை
கெட்டிப் பாப்பா குடிக்குது.
அம்மா பேச்சுக் கேட்குது.
அடங்கி ஒடுங்கி இருக்குது.
குழந்தைப் பாப்பா துள்ளியே
கூடி விளை யாடுது.
மே மேயினு பாடுது
மேயத் தளிர் தேடுது...
வளைய வளைய அம்மாவை
குழையக் குழைய சுத்துது...
அங்கும் இங்கும் ஓடுது.
அன்பில் துள்ளி ஆடுது.
சும்மா சும்மா பாயுது.
அம்மா நிழலில் ஓயுது.
கொ,பெ.பி.அய்யா.
சின்னச் சின்ன ஆட்டுக்குட்டி
சிங்கார ஆட்டுக் குட்டி.
குதித்துக் குதித்து துள்ளுது.
குட்டிப் பாப்பா ஆட்டுக்குட்டி.
முட்டி முட்டி அம்மாவை
முத்தம் இட்டுக் கேட்குது..
புட்டி இன்றிப் பாலினை
கெட்டிப் பாப்பா குடிக்குது.
அம்மா பேச்சுக் கேட்குது.
அடங்கி ஒடுங்கி இருக்குது.
குழந்தைப் பாப்பா துள்ளியே
கூடி விளை யாடுது.
மே மேயினு பாடுது
மேயத் தளிர் தேடுது...
வளைய வளைய அம்மாவை
குழையக் குழைய சுத்துது...
அங்கும் இங்கும் ஓடுது.
அன்பில் துள்ளி ஆடுது.
சும்மா சும்மா பாயுது.
அம்மா நிழலில் ஓயுது.
கொ,பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment