Saturday, 21 December 2013

பழகப்பழக.

பழகப் பழகப் பழக்கம்.

படித்துப் பழகு எழுத்து.
எழுதிப் பழகு கிழித்து.
கிழித்துப் பழகு வடித்து.
தொடுத்துப் பழகு படித்து.

படிப்பதொரு துடிப்பு.
பழக எழும்  படிப்பு..
படைக்கத் தூண்டும் உருக்கல்.
எழுதச் சொல்லும் கிறுக்கல்

கிறுக்கியதைப் பொறுக்கு.
பொறுக்கியதில் சுருக்கு.
சுருக்கியதில் இருக்கு
சுந்தரமாய் படைப்பு..

வானத்தில் பிறபபவனோ!
வாழுங்  கவிஞன் ?
மோனத்தில்தானவன்
கானமாய் பிறக்கிறான்.

விரலில் பிறக்கிறான்
வித்தைக் கவிஞன்.
உறவில் பிறந்தவன்
உணர்வில் விளைகிறான்.

பழகப் பழகப் பழக்கம்.
விளங்கு கவிஞன் துலக்கம்..
அழகுத் தமிழே ஆக்கும் .
பழகு கவிதைப் பழக்கும்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment