காதல் துணை!
இருமனங்கள் கூடி ஒருமனமாகி
காதலில் ஒன்றி கலந்துரையாடி
மௌன மொழியில் மயங்கியபோது--
ஊதல் காற்றது உள்நுழைந்தாடி
குறும்புகள் புரிந்து தோற்றதாகி
இருவர் நெருக்கில் இடையே பிதுங்கி--
விலகி வந்து வியந்து கண்டு
குலவை செய்து குதுகலங்கொண்டு
உச்சிமுகந்து வாழ்த்துதோ சூழ்ந்து!
கடலுங்கண்டு அலைகளை அனுப்பி
கால்கள் கழுவி வரவேற்பு செய்து
மீள்கிறபோது அடிமண்திருடி----
நீராடுங்காதல் தூராது வாழ
தூரிடும் நீருட்ன் தூவி வாழ்த்துதோ
தூய காதலே வாழ்கவே என்றே!
கடலுங்காற்றும் காதல் துணைகள்!!
உடலை நெருக்கி உள்ளங்கள் இணைக்கும்!
இடைவெளிபோக்கி இன்பம் பயக்கும்!!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment