Sunday, 22 December 2013

எழுக விரைக!

எழுகவே!விரைகவே!

எழுகவே! நண்பா! விரைகவே!
பெறுவதே ஈழநாடு எழுகவே!
எழுகவே! நண்பா! விரைகவே
புலியெனவே பாயவே
எழுகவே! நண்பா! விரைகவே!

வீறுகொண்டு அணியணியாய்
வீடெண்ணிக் கூடுவோம்!
ஆழி போன்று ஆர்ப்பரித்து
ஊழிப் பேரலை வீச்சாக
எழுகவே! நண்பா! விரைகவே!

தமிழன் என்று சொல்லுவோம்
தலை நிமிர்த்தி செல்லுவோம்..
ஒன்று பட்டுத் தமிழினம்.
வென்றோம் என்று துள்ளுவோம். 
எழுகவே! நண்பா! விரைகவே!

அற வழிதான் பற்றுவோம்.
அகிம்சை நெறி போற்றுவோம்.
உரிமைக் குரல் ஏற்றுவோம்.
உலகுக் குண்மை காட்டுவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!

மாணவர்கள் வலிமையே
மண்ணுணர்ந்த பெருமையே
மறு நினைவு  ஊட்டுவோம்
புரட்சிப் படை கூட்டுவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!

அறுபத் தைந்தின் எழுச்சியே!
அகிலங் கண்ட மிரட்சியே!
அணி திரண்டு உணர்த்துவோம்.
பணிந் திரங்க செருக்குவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!

தீப்பொறிக் கணங்களாம்.
திக்கு நோக்கிப் பாயுவோம்.
காற்றுத் தீயாய் சீறுவோம்.
காட்டாறாய் மீறுவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!

அனுமனின் படையிதோ!
ஆழ்கடலும் தடையாமோ!
ஈழமதை மீட்டுவோம்.
வேழமேறி நாட்டுவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!

ஏற்றப்பட்ட தீயிதோ!
எழுந்தெரியும் நெருப்பிது.
எரிமலைப் பிழம்பெனவே!
பெருகி நிலம் பரவுது.
எழுகவே! நண்பா! விரைகவே!


கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment