ஊனம்
ஒரு தடையோ சொல்!
ஊனம்
ஒன்றும் தடையா சொல்!
மானம்
ஊன்றும் மனிதா சொல்!.
ஏனம் தானும் ஊக்கம் கொண்டால்
வானம் கூட உச்சமோ சொல்!
குறைவும்
நிறைவும் தடையும் இல்லை.
மறையும்
நிலவும் விடையும் இல்லை.
கரையும் நிலவும் கவலை கொண்டால்
வரையும் இரவும் அழகோ சொல்.
வரையும் இரவும் அழகோ சொல்.
மலர்வதும்
கழல்வதும் நிலையற்ற ஒன்றோ!
மறுபடி
விதைத்துக் காய்க்கும் அன்றோ!
உதிர்வது
நினைத்து மலைத்தும் நின்றால்
உலகம் தழைவதும் நிலைக்குமோ சொல்!
பாம்புக்கும் என்ன கால்கள் உண்டோ!
படுத்தும் உள்ளே கிடப்பதும் உண்டோ!
கால்கள் இல்லாக் குறையென அறிந்தால்
காலம்
வாழ்ந்தும் நிறைக்குமோ சொல்.
பறவையும் வேண்டுமோ கரங்கள் கேட்டு.
உறவையும் நாடுமோ உதவியும் கேட்டு.
கைகளை எண்ணி செய்கை தளர்ந்தால்
கைகளை எண்ணி செய்கை தளர்ந்தால்
செய்கலைக் கூடும் பின்னுமோ சொல்.
பார்வை அறியா பழம்தின்னி வௌவால்
யார்துணை கெஞ்சும் இரவிலும் வழியால்!
ஒலியலை நுட்பம் அறிவு ஒன்றினால்
உலகம் சுற்றும் துணிவிலையோ சொல்!
வெண்பூனை
அறியுமோ செவியறிவு தான்
உண்பனத்
தேடாதோ உணர்வினால் தான்
அசைவுகள்
அறிந்தும் வாழ்வது வென்றால்
ஆறறி மனிதன் தோற்பதோ சொல்!
ரூஸ்வல்ட்
அவரை அறியனும் தானே
தோசம்
இளம் பிள்ளை வாதம் தானே,
அமெரிக்க
நாட்டை உயர்த்தினார் என்றால்
அடைவதைத் தடுக்குமோ ஊனம் சொல்!
இழந்த சுவர்க்கம் இலக்கியம் செய்தார்.
இறையின் விளக்கம் இலக்கினை எய்தார்.
இறையின் விளக்கம் இலக்கினை எய்தார்.
பிறவிக் குருடர் ஜான்மில்டன் அவருள்
அறிவின் ஒளிச்சுடர் அணைந்ததோ சொல்.
கால்
அது ஊனம் தடுக்குமோ ஊக்கம்!
பாழ்
அது செய்தும் படுத்துமோ தேக்கம்!
சுதா
சந்திரன் நாட்டியச் சாதனை
செய்
கால் ஆக்கம் சோர்ந்ததோ சொல்!
இன்னும் இருப்பர் ஆயிரம் உலகில்!
வென்றவர் துணிவில் ஆகினர் செயலில்.
குறைகளை
எண்ணிக் குறைபடல் கோழை
நிறைக்கும்
முயற்சி சவாலே சொல்!
ஈனம்
காட்டி இரப்பதோ சொல்!
ஊனம்
விற்றும் பிழைப்பதோ சொல்!
மானம்
ஒன்றே பெரிதெனக் கொண்டே
தானம்
உயர்த்தல் வாழ்வெனச் சொல்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment