Thursday, 19 December 2013

கோபம் பொல்லாதது.

கவனம்---கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது---அது
குழந்தையிடம் இல்லாதது.
வேகம் கூடாததுஅது
விபத்துக்கு ஆளாவது.

வார்த்தை கவனம் வேண்டும்
வழுக்கினால் மோசம் தூண்டும்
பார்த்துப் பேசவேண்டும்.
பழக்கத்தை மதிக்க வேண்டும்.

கோபத்தின் தீமைகளை
கோர்த்துத் தெளியவேண்டும்.
ஆபத்து அதுபோல் எதுவும்
அருகில் இருப்பதில்லை.

கோபம் துணிவதெல்லாம்
குழப்பும் முடிவுகளாம்.
பாவம் அறியாதாம்.
பழமையும் புரியாதாம்.

ஆத்திரம் தூண்டிவிடும்
அவசரக் கோபமது.
பாத்திரம் உன்னைத்தட்டி
பாலினைக் கொட்டிவிடும்.

ஆகும் நன்மையுண்டோ!
கோபம்  துணையுண்டோ!
காய்க்கனி இனிப்பதுண்டோ!
காய்ந்துறவும் மீள்வதுண்டோ!

சுட்டிப் பிறரைப் பேசாதே
சுருக்குச்சொல்லால் குத்தாதே!
சுட்டசொல்லும் வீசாதே!
கெட்ட கோபம் தூண்டாதே!

கட்டித்தனம் பேசாதே!
குட்டிச்சினம் சீண்டாதே!
மற்றவரை இழிக்காதே!
மனம் நோகச்செய்யாதே!

பிறர்க் கொண்ட குறைகளை
பிதுக்கி நீயும் ரசிக்காதே!
பலரும் கூடும் வெளியிலே
பழித்துப் பேசி இடிக்காதே!

அடுதாரைத் தரம் தாழ்த்தி
அவமானம் ஏற்படுத்தி
அதனாலே உனை உயர்த்தி
ஆவதுண்டோ பேர் நிறுத்தி.

மாற்றார்க்கும் உணர்வுண்டு
மறுப்பதற்கும் அறிவுண்டு .
மாறி மாறி தூற்றிக்கொண்டு
மானம்போனால் என்னவுண்டு.?

ஆதாரம் தேடிக் கண்டும் 
அதுவாய்ந்தும் முடிவெடுத்தும்
சேதாரம் இல்லாமல்
சீர்தூக்கி சினம் காப்பீர்!

நகைச்சுவை பழகுவீர்!
நயமுறப் பேசுவீர்!
உறவுகள் பெருக்குவீர்!
பிறவியிற் பேர் சிறப்பீர்!

அமைதியில் மனம் காத்து
அது அமையத் தியானித்து
மனிதம் அது தான் மதித்து
மன்னித்தும் உனை உயர்த்து.

கொ.பெ.பி.அய்யா.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10422413_308375459348950_2398486210320108230_n.jpg?oh=dc592fdefd3c0ce1c2cc22b63084f555&oe=5562052D&__gda__=1428298311_ea3055d8cfa1d43ab0f2dda7d1b24bee

No comments:

Post a Comment