தேடும்
புறா--அதிர்வுகள்
ஏதோ விசையும் தூண்டுதே
எங்கோ இருந்தும் சீண்டுதே!
எண்ணம் தொட்டும்
அதிருதே!
வண்ணம் பட்டும் வளருதே!
மோதும்
விசையும் துள்ளுதே!
மூச்சும்
கூட ஏங்குதே!
போதும்
எனவும் சொல்லாதே....
ஏதோ மனமும் தேடுதே!
தொடுத்து வீச்சும் பாயுதே!
படுத்தும் பேச்சும் ஓயுதே!
முடுக்கும் எண்ணம் ஓடுதே
எடுக்கும் திண்ணம் கூடுதே!
அலையின்
பாங்கும் தன்னிலே!
தொலையும்
நினைவும் என்னிலே!
நிலவும்
மாற்றம் முன்னிலே!
இலையே
ஏனோ ஒண்ணிலே!
மெல்ல
மயங்கும் எண்ணமே!
சொல்லும்
அவளின் வண்ணமே!
அழகின்
விசையே பண்ணுமே
அதிர்வின்
அலையே இன்னுமே!
நளினி
யவளே அதிர்கிறாள்
நளினம்
அவளே ஒளிர்கிறாள்.
நகையில்
விளைந்த மாயமே!
வகையில்
அதுவும் நேயமே!.
மலர்ந்த
முகமும் அதிலே
மகரந்தம் பரவும் அழகிலே
விளைந்த
விசையும் அமைதியே
அதிர்ந்த
காதல் மனதிலே.!
நேரும் சங்கமம் நோக்கொன்றோ!
தேரும்
காதல் தாக்கன்றோ!
காதல் என்பதும் விபத்தென்றால்
ஈதல் சந்திப்பும் விதியன்றோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment