தமிழனென்றே சொல்லுவோம்!
என்ன சொல்லி வருவதோ!
என்ன வென்று கிழிப்பதோ!
யாரை இங்கு குற்றம் சொல்ல!
ஊரை ஒன்று கேட்டுச்சொல்லு!
யாருக்கென்ன லாபமோ!
போருக்கென்ன தேவையோ!
சாதிக்கொரு நீதி என்றால்
சலுகையென்ன மிஞ்சுமோ!
சாதியென்ன சாதியோ!
சண்டையென்ன நீதியோ!
வீதியெங்கும் சிவப்பதால்
மீதியென்ன இருக்குமோ!
மொத்தமா சேர்ந்திழுப்போம்.
சத்தமின்றி தேர் நகரும்.
ஒத்தையா என்ன செய்ய!
முத்தையா சொல்லய்யா!
தமிழனென்று சொல்லுவோம்!
தலைநிமிர்த்திச்செல்லுவோம் !
ஒன்று சேர்ந்து வாழுவோம்
தொன்று பாடி ஆடுவோம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment