தருணங்கள்.
நல்ல தருணங்களோ
நாளும் வருவதில்லை.
வல்லவன் இறைவனவன்
வாய் மொழியில்
சொல்வதில்லை.
அருகில் வந்து தானும்
அமைதியாய் காத்திருக்கும்.
தருணம் தான் நானென்றும்
தப்பட்டமும் கொட்டாதாம்.
எண்ணை விற்கும் வியாபாரி
திண்ணை வந்து ஆறுவான்.
உன்னையவன் தேடுவான்.
ஓராழாக்கு விற்கவே.
வண்ணமாய் பேசுவான்.
வாங்கும்படி செய்யுவான்.
அவனுக்குள் திறமையதும்
அதுவொரு தருணம் சொல்லும்.
தெருவிலொரு தாள் கிடக்கும்
தேடி உன்னை காத்திருக்கும்.
குனிந்து தன்னை எடுக்கத்துள்ளும்..
விரிந்துமொரு சேதி சொல்லும்..
நேரமமும் கைகூடும் தூரம்தான்
பார்த்திட்டால் உனக்கது யோகம்தான்.
தருணமது தேடியுன்னை நாடித்தான்
தருஞ்செய்தி ஒன்றிருக்கும் கூறித்தான்..
இன்றுதான் ஆள் எடுப்பாம்.
இன்னும்தான் நூறடியாம்.
இந்திய இராணுவமாம்
சென்றிடு என்று சொல்லும்.
எழுத்தும் ஒரு தருணமாகும்
படித்தும் சரி புரிவதாகும்..
எதையும் குறி அறிவதாகும்.
அதையும் வழி தொடர்வதாகும்.
அதையும் வழி தொடர்வதாகும்.
பழகிடப் பழகிடத் தொடர்புகள்
பலப்பலத் துறையும் அறிமுகங்கள்..
பழமும் நழுவிப் பாலிலே
விழுவதும் அழகுத் தருணமே!
காதலுங்கூட அப்படித்தான்
மோதலாகும் தருணம்தான்
அகமதில் நுழையும் தற்செயல்தான்.
அதுவிளை வளரும் காதல்தான்.
வாய்ப்புகள் வந்த பொழுதெல்லாம்
வழுவ விட்டுத்தான் ஏமாந்தேன்.
காய்ந்து ஆறிய சருகானேன்
காற்றிலாடி நான் திரிகிறேன்.
ஆதலால் தான் சொல்கிறேன்
சோதரர் கொஞ்சம் கேளுங்கள்.
தேடி வந்திடும் தருணங்கள்தான்
கூடி தந்திடும் விழித்திருங்கள்!.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment