சங்கம் பங்கம்
சங்கம் ஒன்றில் அங்கம் ஆகலாம்.
பங்கம் என்றில் சிங்கம் சீறலாம்.
சங்கம் ஒன்றில் அங்கம் ஆகலாம்.
பங்கம் என்றில் சிங்கம் சீறலாம்.
சங்கம் அமைத்து சண்டைக்கு நின்றால்
பங்கம் எதுவும் அங்கீ காரமாகும்!
அமைப்பு ஒன்றில் அமைந்தால் போதும்.
கடையும் விடமும் கலந்தால் அமிர்தம்!
அரசியலமைத்து எதுவும் செய்வார்
உரசிப் பார்த்தால் ஊரையும் எரிப்பார்!
விலை
மகளெல்லாம் கலை
மகளென்பார்
தலைவிதி
மாறும் நிலைமை
ஆகும்!
ஆணும் ஆணும் காமம்
பழகும்
அனுமதி
விதியும் அவசரம்
ஆகும்!
தேவை
கருதும் திருடுங்கூட
பாவம்
விலகும் பாதுகாப்பாகும்!
கொலைகள்
புரியும் கொடூரங்கூட
நிலைமைகள்
கூறி நியாயங்களாகும்!.
சட்டங்கள்
வளைந்து சங்கம் நிமிர்ந்தால்
குற்றங்கள்
நித்தமும் கும்மிதான்
அடிக்கும்!
அரசியலும்
சினிமாவும் அவரவர்
பிழைப்பு!
புரியாமல்
ஏனோ!எரிகிறாய்
வீணே!
வேடங்கள்
கலைந்தால் பாடங்கள்
புரியும்!
விழித்தால்
விலகும் குழியொளி
இருளும்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment