உள்ளம்
என்பது என்ன
பாடுகிறேன்
பாடுகிறேன்
பாட்டொன்று பாடுகிறேன்.
தேடுகிறேன்
தேடுகிறேன்
தெய்வத்தையே
தேடுகிறேன்.
இருக்கிறானோ
இல்லையோ
இருந்தாலவன் நல்லதே!
காற்றென்றால் யார் கண்டார்
காற்றுக் கென்ன வடிவமோ!
கண்ணாடி அறியாத
காலமதில்
மனிதனோ!
தண்ணீரில்
தன்னையே
தானேதான் கண்டறிந்தான்.
உன்னை
நீ அறிவதற்கோ
கண்ணாடி தேவையெனில்!
இறைவனை
உணர்வதற்கு
என்ன தேவை தேடினோமோ?
இதயம்
என்றால் என்னவோ?
இரத்தம்
செய்யும் கருவிதானோ?
உள்ளம் அங்கே தேடினோமோ!
உள்ள தங்கே வல்லோனே!
எங்கெங்கோ ஓடுகிறோம்.
தங்கத் தேர் ஓட்டுகிறோம்.உன்னைநீ தெயவ மென
உணராமல் விட்டு விட்டாய்.
ஊணுருகிப் பாடினால்
தாயாகி இறை வருவான்.
சேயாக வாரி அணைப்பான்.
உயிரென்றால்
என்னவென்றும்
உள்ள
இடம் எதுவென்றும்
மருத்துவமும் கண்டதுண்டோ!
இறைவனுக்கே இரகசியம்.
காணறியா மாயனவன்!
வானுறைத் தூயனவன்!
கண்டுவிட்டால்
பக்தியென்ன!
ஒன்றிய பின் முக்தியென்ன!
சுத்த
சன் மார்க்கமதை
நித்தியம்
பழகிடவே!
சுத்தமாகும்
சித்தமே!
சத்தமின்றி
உள் அமர்வான்!.
உள்ளிருக்கும்
கோவிலது
உள்ளமே
என உணர்க!
பொல்லாத நாசங்களை
வெல்ல
ஆகும் அவன் வரவு.!
ஜோதியாய்
நிறைந்திருப்பான்.
நீதியாய்
உறைந்திருப்பான்.
ஆதியாய் மறைந்திருப்பான்.
நாதியாய் இறை இருப்பான்.
இயங்குவது
உண்மையானால்
இயக்கும்
விசை இறைவனால்.
அறிவியல் சக்தி யென்றால்
அது ஓம் சிவம் என்போம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment