கானா
பாட்டு.
கானாப் பாட்டு கேளு!
தேனாப் பாட்டு தூளு!கஷ்டம் எல்லாம் மறக்கும்
இஷடம் போல பறக்கும்.
கோயம்பேடு
சந்தை-அங்கு
கூடுது
மாடு மந்தை!
மனசு
அதுல சேர்ந்தே-தினம்
வாடுது
உன்னச் சுமந்தே!
கூவம்
நதியும் மணக்கும்--நீ
குங்குமங்
கரைச்சா சிவக்கும்!
பாவந்
தீருங்குளிச்சா- உன்
பாவாடை
துவச்சி வழிஞ்சா!
நிறைஞ்சி
ஓடுது பாரு-இது
நித்ய
ஜீவ அடையாறு!
சாக்கடைப்
போக்கு சாவாறு--என்
போக்கடை
இதுவா வெளியேறு!.
கொடுங்கையூரு
குப்பை--ஊரு
குடலப்புரட்டுது
கப்பே!
படுத்தேன்
இங்கே இப்பே--ஒரு
பாட்டும்
பாடடி ஒப்பே!
அய்யோ
பாவம் ஆனேனே--இன்று
மெய்யாக்
கூவம் நானே!
பொய்யே
போதை சுகமே---மீனா
செய்யுங்காதல்
நிசமோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment