Saturday, 21 December 2013

பிவம் சந்திரன்.

பாவம் அந்தச்  சந்திரன்.

பாவம்  !
அந்தச்  சந்திரன்  ஏன்
இப்படி வளர்வதும்
தேய்வதுமாக  இருக்கிறான்?
இவனுடைய உடம்புக்கு
என்னாயிற்று?
ஆகாயத்தில் யாரையோ
தேடுகிற்றான் ஓடுகிறான்..
கண்டானா இல்லையா?
காலமெல்லாம் இவன்
இப்படித்தானே திரிகிறான்.
இவனென்ன பைத்தியக்காரனா?
ஒருநாள்  புலப்படாமலே
ஒளிந்து கொள்கிறான்.
ஓய்வெடுக்கத்தான் அப்படிச்
செய்கிறானா?இல்லை
ஓவென்று அழத்தான்
அப்படிச் செய்கிறானா?
ஒன்றுமே விளங்கவில்லையே..
சந்திரன் கெட்டதும்
பெண்ணாலே என்று
பேசிக் கொள்கிறார்களே!.
அடடா................................
அவனுக்குமா இந்தக்கதி?..


கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment