மகாத்மாக்கள் மரிப்பாரில்லை
தந்தை இழந்தோமென
தவிக்கும் மானுடமே!
உந்தை அமைதியில்--என்றும்
உன்னிலே வாழ்கிறார்.
புனிதன் ஏசு போன்றொருவரும்
புத்தன் தோன்றலின் பின்னரும்
மனிதம் பேச வந்த மகான்கள்--பிறவி
மாறி மாறி ஊறினர் அவரும்.
காந்தி மார்டின் மண்டேலாவும்
ஏந்தி வந்த அவதாரங்களாகும்.
அவரவர் வேலை அவரவர் முடித்தும்--ஓயும்
அமரரானார் அவசியம் வரவும்.
மகாத்மாக்கள் மரிப்பாரில்லை
மனிதம் மரிக்கப் பொறுப்பாரில்லை.
எங்கோ என்றோ தோன்றாமலில்லை--வரவு .
என்றோ எப்போ அறிவாரில்லை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment