Wednesday, 18 December 2013

மார்கழி வருக

மார்கழியே வருக!

மார்கழியே வருக!ஊர்விழிக்க வருக!
கார்கழிந்து வருக!பார்குளிர வருக!
ஏரெழவே வருக!நேர்செழிக்க வருக!
தேரெழுந்து தீர்க்கமே வருக!

வாலைக் குமரிகள் காலைப் பனியதில்
கோலம் வரைவதில் காலைப் பதிவதில்
மாதவன் சிரிப்பதில் மார்கழி மலர்வதில்
ஆதவன் எழுவான் கடல்.

ஆளை எழுப்பிட காலை முழங்கிடும்
தாள இசையொலி வானம் நிறைந்திடும்.
ஆண்டாள் எழுப்பிடும் ஆனந்தப் பஜனனைகள்
ஆன தெருக்களும் கோவில்.

வாடைக் குளிரிலும் ஊரு விழித்திடும்
ஆடை நனைத்தும் நீரு குளித்திடும்.
ஆடும் மணிகளும் ஆலயம் முழக்கிடும்.
தேடும் இறைகணம் காண்.

வேளை விடியலில் வீதி விரைந்திடும்.
வேத வசனங்கள் நீதி உரைத்திடும்
வாசத் திரவியம் சாந்தும் மணந்திடும்  
வாசல் மலர்களும் பூக்கும்.,

பூக்கும் முகமலர் ஆக்கும் அழகதில்
தோக்கும் மலர்வனம் தாக்கும் மணமதில்
தேக்குந் தெருவெலாம் மாக்குலம் மயங்கும்.
காக்கும் இறைகளும் கூடும்.


பாடும் குரல்களே பாடிக் கலந்திடும்.
தேடும் பகவனை சூடிப் பணிந்திடும்.
மூடிய இரவும் ஓடி ஒளிந்திடும்.
தேடிய விடியலும் கூடி.

பேசும் மனிதம் வீசும் சுகந்தமே!
வாசம் இறைவனில் நேசம் பகர்வதே!
நாடும் வழிகளே கூடும் பகவனே.
ஆடும் இடமோ அகம்.

கொ.பெ.பி.அய்யா,







                                              .







No comments:

Post a Comment