புத்தி தெளிந்தது..
தண்ணீர் விட்டுழுதால்
தரிசுங்கழனியாகுமே!
கண்ணீர் விட்டழுதால்
கல்நெஞ்சுங்கலங்குமே!
பன்னீரைச் சாற்றினேன்
பகவதியைக் கெஞ்சினேன்...
செந்நீருங் கொட்டினேன்.
சின்னவளைக் கேளென்றேன்..
"ஒருதலைக் காதலடா
ஒரு நாளுங் கூடாதடா!
இருதலைக் காதல் செய்து
ஏற்றாளைத் தேர்கவென்றாள்.
இருவழி ஓட்டமடா!
இணையாத நீட்டமடா!
மறுமுனை கூடும்போதே
பொருந்தும் சுபக் காதலென்றாள்.
இயல்பான தூண்டலடா!
இதயங்கள் சீண்டலடா!
செயலெதிலும் தோன்றாதடா!
சுயம் பயிலும் காதலென்றாள்.
இருவழி ஓட்டமடா!
இணையாத நீட்டமடா!
மறுமுனை கூடும்போதே
பொருந்தும் சுபக் காதலென்றாள்.
இயல்பான தூண்டலடா!
இதயங்கள் சீண்டலடா!
செயலெதிலும் தோன்றாதடா!
சுயம் பயிலும் காதலென்றாள்.
வீணாக உளையாதடா!
வெட்டியாய் அலையாதடா!
எட்டாத பழந்தொடவும்
கொட்டாவி விடாதென்றாள்.
புத்தியும் தெளிந்ததடா!
புத்துணர்வும் பெற்றேனடா!
சுபமாக முடியுமடா,
பகவதியும் வாழ்கவென்றாள்.
பகவதியும் வாழ்கவென்றாள்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment