Sunday, 22 December 2013

புதுப்பெண்ணோ!

புதுப் பெண்ணும் பேசலாகுமோ!

தென்றலே  என்னைத்
தீண்டாதே- கண்டால்
அவருங்  கோவிப்பார்.
எவருந்  தீண்டா
என்னையே -அவருந்
தழுவ அனுமதியேன்.
பெரியவர்கள் வந்து
பேசட்டும்  -பேசி
நாளுங் குறிக்கட்டும்.
அதுவரை அவரும்
பொறுக்கட்டும்--ஆற்று
நீரல்ல நானுந்தான்.
போகிற போக்கில்
கூறி  விடு--புதுப்
பொண்ணும் ரொம்பப்
பேசலாகுமோ!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment