மாவிளக்கு
அணி வகுப்பு.
மாவிளக்கு
அணிவகுப்பு
மாரியம்மன்
கோவிலுக்கு.
கொட்டு
மேளம் நாதஸ்வரம்
குலவை
ஒலி அழைப்பு வரும்.
வேப்பிலைத்
தோரணங்கள்
வீதிமின்னும் ஆபரணங்கள்.
காப்புக்
கட்டி ஆட்டங்களோ!
கலை பாடும் பாட்டங்களோ!
சாமி
கூடி ஆடி வரும்.
ஆசாமிகள் கூடி வரும்.
கேட்டு சாமி வரமெல்லாம்.
நீட்டி
நீர் அருள் வழங்கும்.
உனக்குள்ளும்
சாமி உண்டும்.
உள்ளிருந்தும்
அது தூண்டும்.
தன்னை நீ மறக்கும் போது
உன்னை அது உலுக்கி ஆடும்.
பொங்கலிட
வெண்கலமும்
தங்கமாக
மின்னலிடும்.
மங்கையர்கள்
சுங்கடிகள்
திங்ககளாகக்
கூடிவரும்.
விண்சிந்தும்
நட்சத்திரங்கள்
பெண் கண்கள் விசித்திரங்கள்.
கருமேகம்
ஓட்டங்களோ !
கார்குழலாம்
கூட்டங்களோ!
காளையர்
வட்டங்களோ!
வாளைய்ர்க்
கூட்டங்களோ!
சேலையர்
சித்திரங்களோ!
குலைபடாப்
பத்திரங்களோ!
எண்ணக்காளை
ரசித்திருப்பர்.
வண்ணப்பெண்
இசைந்திருப்பர்.
திண்ணமாய்த்
தெரிந்திருப்பர்.
பெண்பார்க்க
விழைந்திருப்பர்.
மஞ்சள்
நீர் அஞ்சி ஓடும்--
மாப்பிள்ளைகள்
தெரு ஓடும்.
கொஞ்சி
இளம் வஞ்சி தேடும்—
நெஞ்சழகன்
நெஞ்சம் கூடும்.
சொந்தம்
எல்லாம் கூடிவரும்
பந்தம்
கூடித் தான் மகிழும்.
சொந்தம்
பந்தம் தொடர்வதற்கும்
சம்மந்தங்கள்
கூடி வரும்.
ஊரெல்லாம்
ஒன்று கூடும்.
உள்ப்பகைககள் அன்று ஓடும்.
தேர்
இழுத்து ஊர் சேரும்.
ஊர்
வலுத்து தேர் ஊறும்.
நீதிக் கலை நாட்டியங்கள்
ஆதி விளை ஆட்டங்களும்.
ஓதும்
நல் மந்திரங்கள்
சாதி மக்கும் தந்திரங்கள்.
வருடம்
தோறும் கொண்டாட்டம்.
வாழ்வு
அதை நிலை நாட்டும்.
பெருகி
வரும் சொந்தங்களை
அணைத்து
அது சொந்தமாக்கும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment