என்
தாயே என் குருவே!
என்தாயே என் குருவே!--என்னை
இப்படியும் ஏன் வளர்த்தாய்?
இன்னும்
நான் அப்படியே-புவியில்
இருப்பதுவும்
சோதனையோ!
வாழ்த்துப்
பாடி வளர்த்தாயோ--அதனால்
வசை
மொழிகள் தெரியலையோ!
காழ்ப்புணர்ச்சி வளர்க்கலையோ--உறவில்
கள்ளம்
பேசப் புரியலையே!
கூடி
வாழச் சொன்ன தாயே--கொடும்
கோபம் ஆளச் சொல்லலையோ!
ஓடியுதவ விட்ட நீயே--என்னை
தேடி
ஓடச் செய்யலலையே!
பாசந் துலக்கிப் போனதாயே--சந்தர்ப்ப
வேசம் விளங்க பழக்கலையோ!
அன்பைக் காட்டிப் போனதாயே---சொந்த
ஆசை ஊட்டத் தோணலையோ!
மெய் பழக்கிப் பறந்த தாயே--உலகப்
பொய் பழக்க மறந்தாயோ!
கை நீட்டக் கடிந்தாயோ---பணப்
பை தேடப் படிக்கலையே!
மதிக்கக்
கற்றுத் தந்தாயோ--வேட்டி
மடித்துக்
கட்டத் துணிவில்லையே!
துதிக்கச்
சொல்லித் தந்தாயோ--சிறு
துரும்பைக்
கூடக் கிள்ளலையே!
கனிந்த
சொல்லே உதிர்த்தாயோ--ஒரு
காய் கடித்தும் சுவைக்கலையே!
பணியக் கற்றுத் தந்தாயோ--மாறி
இணங்கி
வாழ அறியலையே!!
நன்மை
போற்றிக் காத்தாயோ--சிறு
தீமை
ஏதும் அறியலையே!
அறிவு எல்லாம் கொடுத்தாயோ--நேர்மை
நெறி விலக விளங்கலையே!
பிரியம் நெஞ்சில் நிறைத்தாயோ--நேசப்
பிரிவைத் தாங்கக் கூடலையே!
கனவிலேனும்
வருவாயோ--தாயே
கண்ணில் துயில் தருவாயோ!
எந்தையுடன்
நீ கூடி---இறையில்
இணைந்தாயோ!கலந்தாயோ!
உந்தன் மடி பயில மீண்டும்--அம்மா
எந்தன் விடை அருள்வாயோ!
உந்தன் மடி பயில மீண்டும்--அம்மா
எந்தன் விடை அருள்வாயோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment