Friday, 20 December 2013

உன்னை நீ தேடு.

உனக்குள்ளே தேடுக

நீ தெய்வத்தைத்
தேடி அலையாதே---தெய்வம்
உனக்குள்ளே இருந்து
உன்னைக் கண்காணித்துக்
கொண்டுதான் இருக்கிறது..

உள்ளேதான் ஒளிந்திருப்பான்
நல்லாரில் விழித்திருப்பான்.
பொல்லாமை புகுந்த விடம்
வல்லாமை வடிவெடுப்பான்.

பிறப்பொன்று  பிறக்கும் போதே
இறப்பொன்றும் எழுதப்படும்.
தலை யெழுத்தும் பொய்யில்லை
விலை என்றும் ஏதுமில்லை.

இறந்தவனின் சொத்து மேலே
இறப்பவர்கு கண்ணே.
இருப்ப திங்கு சில நாளே.
எரிந்தால் உண்டோ மண்ணே!


கொ.பெ.அய்யா..

No comments:

Post a Comment