Friday, 20 December 2013

விடியட்டும் விடுங்கள்.

விடியட்டும் விடுங்கள்

விடுதலை வேண்டினோம்
வெள்ளையரை தோற்கடித்தோம்.
வென்றதைக் காக்கவின்றும்
சொந்தங்களுடன் போராட்டம்!

விடியலைத் தேடுகிறோம்
விடவில்லை பேதவிருள்...
பேதங்களை விதைத்துத்தான்
பிழைக்குதிங்கு தலைமைகள்.

குடும்பங்களாய் கட்சிகள்
மடமைகளாய் தொண்டர்கள்.
சுயநலக் கூட்டங்கள்
சுருட்டுதிங்கு மூட்டைகள்.

பேச்சாளத் தெரிந்தவரே 
ஆட்சியாளப் பிறந்தவராம்.
ஏய்த்தாளும் கொள்கைகூடி 
பேய்த்தாளம் ஆடுதிங்கே.

வீச்சம் வீசும் நாசமாச்சு 
தேசம் பேசும் வேசமாச்சு 
காய்ச்செரிக்குது ஏறும்விலை
மூச்சடைக்குது ஊழல்புகை!

மனிதருடன் போராடினோம்
மனம் மாறி விட்டுப்போனான்.
அதிகாரத்தைக் கெஞ்சுகிறோம்
விடியட்டும் விட்டு விடுங்கள் !

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment