தினமும் போராட்டம்.
வானும் நாணும் உன் முன்னே !
பேணும் தானும் நீ ஒண்ணே.!
காணும் கருணை கடலம்மா !
ஊணும் உயிரும் உனதம்மா.!
வங்காளத் தாயே அங்காளம்மா
பங்காள நீயா தந்தாயம்மா ?
சிங்காளப் பேயர் எந்நாளம்மா
இங்காள ஆயம் கொண்டாரம்மா?
பேணும் தானும் நீ ஒண்ணே.!
காணும் கருணை கடலம்மா !
ஊணும் உயிரும் உனதம்மா.!
வங்காளத் தாயே அங்காளம்மா
பங்காள நீயா தந்தாயம்மா ?
சிங்காளப் பேயர் எந்நாளம்மா
இங்காள ஆயம் கொண்டாரம்மா?
உன்னை நம்பி வாழுகிறோம்
எம்மைக் காக்கும் மாதாவே!
தினமும் உயிருக்குப் போராட்டம்
திரும்பும் செயலும் உறுதியில்லை!
வலைதான் கொண்டு வீசுகிறோம்
வயிற்றுக்காக வாழுகிறோம்
கொலைகார சிங்களப் பாவியர்கள்
தலைகள் அறுத்து வீசுகிறார்.
ஏனென்று கேட்கும் அதிகாரம்
வீணென்று போச்சோ பரிவாரம்.
சிதறி விழுந்த சிறுகடுகு.
எதிரில் எழவும் எதுதுணிவு.
எதிரில் எழவும் எதுதுணிவு.
ஆழம் சென்று வலை விரித்து
வாழும் எங்கள் குடும்பமென்று
வீழும் மீன்கள் பாடு கொண்டு
வீடு காணவும் நீதமில்லை!
கண்ணீர் கரையில் மனைவி மக்கள்
காத்தே இருப்பர் வெறும்வயிறில்!
உயிர்தான் கொண்டும் போவமோ
உடல்தான் மிதந்தும் சேருமோ.
யாரை நாங்கள் கொள்ளையிட்டோம்?
யாரை நாங்கள் குடிகெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
அள்ள வந்த அட்சயமே!.
கடல்தான் உலகின் தாயம்மா
கருணை வடிவம் நீயம்மா
தடமும் அழிந்தும் போவோமோ
தாயும் இழந்து சாவோமோ!!!!!
இனத்தை அழிக்கும் கூட்டம்தான்
இலங்கையை ஆண்டு வந்தது.!
மனத்தை கொன்ற அரக்கனவன் !
பிணத்துள் புதைநாள் என்றது.?
அந்த நாள் சொந்தம் அது.
அரசு சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.
இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதோ!
எந்த சொந்தம் முந்துவதோ!
ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!
இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.
மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.
இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.
ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!
கொ.பெ.பி.அய்யா.
க
No comments:
Post a Comment