Wednesday, 18 December 2013

வட்ட நிலவே வா

வட்ட நிலவே வா வா.[குழந்தைப் பாடல்)

வட்ட நிலவே வா !வா!
கிட்டக் கிட்டவே வா ! வா!
எட்ட எட்டவே வா! வா!
தொட்டு விளையாட வா! வா!

வெள்ள வெள்ளிச் சட்டையோ!
வேக மாகப் போறியோ!
சொல்லக் கேக்க மாட்டையோ!
செல்லக் குட்டி வாரியோ!

ஒளிஞ்சு விளை யாடுற
ஓடி ஓடித் தேடுற
பாப்பா இங்கே இருக்குறேன்
பாரா மத்தான் ஓடுற.

கண்டு புடிச்சது நானேதான்
கட்டி முத்தம் தந்திடு.
வந்து குதிரை ஏறுவேன்.
வரா விட்டால் தேடுவேன்..

கொ.பெ.பி.அய்யா.



.





No comments:

Post a Comment