Friday, 20 December 2013

காதலியைக் காண....

உன்னைக் காணாத...............!

உனைக் காணாதக் கண்கள்--பீளைச்
சுனை  தானோ!புண்கள்
நீ நிறையாத இடமோ--பாலை
வனம் தானோ!மனமோ!

உனை எண்ணாத நெஞ்சும்--புகை
நஞ்சுந் தானோ!தஞ்சம்.
நீயில்லாதப் பொழுதும்--கொல்லும்
தொல்லை தானோ!முழுதும்.

உனைத் தீண்டாத கரங்கள்--பட்ட
மரம் தானோ!நிசங்கள்.
நீ அணையாத தூரம்--எட்டாக்
கனி தானோ!சோகம்.

உனை வேண்டாத சுரங்கள்--அழும்
சுதி தானோ!வரங்கள்.
நீ பாடாத கவிதை--சுடும்
வரி தானோ!உயிரை.

உனைக் கேளாத செவியோ--ஒலைச்
சுருள் தானோ!சருகோ!
நீ சொல்லாத சேதி--மரண
மடல் தானோ!தேதி.

உனை வாசியா நாசிகள்--தூசித்
துளை தானோ!ஓட்டைகள்.
நீ வீசாத வாசங்கள்--உயிர்க்கு
பகை தானோ!தோஷங்கள்.

உனை முத்தாத அதரங்கள்--காய்ந்த
மலர் தானோ!சருமங்கள்.
நீ ஊட்டாத மதுரங்கள்--சாய்ந்து
நான் மாய்ந்திடத்தான் விசனங்கள்!

உனைத் தழுவாத ஏக்கங்கள்--தீ
வினை தானோ!தாக்கங்கள்.
நீ தணிக்காத தாகங்கள்--பாலை
ஏங்கிடத்தான்  மேகங்கள்.  !

உனைச் சுவையாத ஐம்புலன்கள்--வாட்டும்
பகை தானோ!ஊடல்கள்.
நீ திகட்டாத தீங்கனியோ!---நிதம்
தேடிடத் தான் நீங்கினியோ!

உனை அகலாத மேனியிதும்--தீய்ந்தும்
அடங்கத் தானோ!தேடுவதும்.
நீ அழுகாத பொற்கனியோ!--ஒருநாள்
அள்ளி அழுதிடத்தான் இக்கதியோ!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment