ஊட்டிக் கனி!
மண் மணக்குது ! மண் மணக்குது!
மழையும் பொழியப் போகுது!
பெண்
சிரிக்குது !பெண் சிரிக்குது!
பேச ஏதோ விழையுது!
கண் விரிக்குது! கண் விரிக்குது!
காதல் அங்கே பிறக்குது!
விண் மயங்குது விண் மயங்குது
வெள்ளி நிலா ஓடுது.
எண் வளருது! எண் வளருது!
இதயம் என்னை வரையுது!
பண் மலருது! பண் மலருது!
பாட்டாய் என்னைப் பாடுது!
விண் கருக்குது! விண் கருக்குது!
வேளை கூடி வருகுது!
தண்ணெடுக்குது !தண்ணெடுக்குது!
தாவி அணையத் துடிக்குது!
திண்ணெடுக்குது! திண்ணெடுக்குது!
தேவியவள் வாசமே!
உண்ணழைக்குது! உண்ணழைக்குது!
ஊட்டிக்கனி நேசமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment