Saturday, 21 December 2013

ஹலோ நலமா?

ஹலோநலமா!!
ஹலோ!!நலமா?
நடையில் என்ன பலமோ!
சுலோ!!சுலோ!சுலோசனா!
சுகமோ வாழ்க!சுகோசனா!

நடக்கும்பொழுதே தெரியுது.
நாடகம் போடுதே புரியுது.
அடக்கம் எங்கே போனது?
ஆடும் இடுப்பென்ன ஆனது?

விரைப்பும் முறைப்பும் ஏனடியோ?
வீணாய் போனேன் நானடியோ!.
இரைக்கிற மூச்சு பறக்கடியோ!
மறைக்கிற பேச்சு எதுக்கடியோ?

பார்வை மின்னல் சுடுகிறதே!
மார்போ குத்திட தொடுகிறதே!
சடையோ சுழட்டி அடிக்கிறதே!
சண்டை எப்போ முடிக்கிறதே!

ஆயுதம் இத்தனை எதுக்கடியோ!
ஆண்கள் பாவம் ஒதுக்கடியோ!
பொழுதும் சாயப் போகுதடி!
போதும் சாயம் வெளுக்குதடி!

கொ.பெ.பி.அய்யா..






No comments:

Post a Comment