பாரதியே வந்தாலும்!
பாரதியே வந்தாலும்
பாட்டெழுதித் தந்தாலும்
யாரதில் கவனம் வைப்பார்
நாட்டோரே சொல்லுங்கள்?
அந்திக்காலம் வழியனுப்ப
அவனுக்கன்று ஆறுபேர்தான்.
இந்தியாவை விழிக்கச்செய்ய
இவன்பட்ட பாடு என்ன?
மனம் படும் நிகழ்வுகள்-
கணம் விடும் அறிவுகள்-
புணர்ச்சி இடும் எழத்துக்கள்-
உணர்ச்சி தொடும் கவிதைகள்.
கவிஞனென்ன பாவம் செய்தான்?
கருத்தைத்தானே சொல்ல வந்தான்.
இருக்கும்வரை வறுமை தந்தோம்.
இறந்தபின்னே பெருமை கொண்டோம்.
தமிழுக்கென்றும் அருமை செய்வார்-
தரணிநின்றும் விதிகள் சொல்வார்.
கமழும் புகழ் கவிஞர்களின்
அமுதக்கவி அறிவில் வைப்போம்.
கொ.பெ.பி.அய்யா.
தரணிநின்றும் விதிகள் சொல்வார்.
கமழும் புகழ் கவிஞர்களின்
அமுதக்கவி அறிவில் வைப்போம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment