Wednesday, 18 December 2013

இராம காந்தி.

மெய் இராமன் காந்தி!

அண்ணற் தயாப
அயன் பாசன் -முக்திப்
பதியி னான
உயர் நேசன்.
கருங் கோலத்
தூய் மையான
நல் சீ ல னானவன்
பூசன்- மெய்ராமன்.

வாய்மைக் கமைந்த
வொரு ராசன்`
செந்நாப் பொழி
மொழி ஏசன்
உள்ளும் ஊறும்
இனிய சொலைக்
கூறும் நலம் கொள்வார்
ஆரே அண்ணல் தானே!

மண்ணை நேரை
வெல்லலுஞ் சீரை
வாற் கொண்டெழுவுஞ்
சினப் போரை-தனை
நேரில் மோதும்
தனிச் சேனை
முன்னே தானே
ஆனே எனக் கோனே!

இல்லை வேறை
ஒத்தும் தாரை.
வேர்க்கொண் டெழுந்து
வினை தீர யவர்
சத்தி யம்சோ
தனைத் தானே
சாந்தி காந்தியம்
நன்றே யது வென்றே!

பத்துக் கெலாம
அயல் தேடும்-நித்தம்
அலைவ தேனோ!
நிலை தானோ!
சுய இராட்டைப்
போல் சுழன்று
ஆன்மக் காந்திநின்று
வாழ்வீர் வாழ்ந்தாவீர்!

முல்லைச் சீரை
ஒத்த ஆடை--திரை
இல்லை மேலே
ஒரு சீலை
வெள்ளைத் தானும்
வினை பேணும்
நேர்மைச் செம்மை
அய்யே-நீ-மெய்யே!

விண்ணிற் தொலைந்ந
விளை நாசம்.
மன்னா நிலைப்
புவித் தோசம்
தகா மோசம்- கொண்டும்
பேதம் செயும் வதை
தீரும் நலம் ஆகும்.
நாடே--கேள் இப்போதே!

எண்ணிற் பெறாத
உயர் வாசன்--பெற்றப்
புதல் வரான
கனம் பேசான்.
சுயம் போற்றத்
தான் மறந்து
தேயம் தன்னிறைந்த
தேசன்-புவி-தாசன்.

மண்ணிற் கிசைந்த
மன வாசன்.
கண்ணா னிணைப்
புவி ராசன்?
நேசன்-மீண்டும்
வர வேண் டுமே
நாளு முனைத் தேடும்
மோகன் இனித் தாயன்

கொ.பெ.பி.அய்யா.  








No comments:

Post a Comment