Thursday, 19 December 2013

மதுவின் மடியில் மரணம்.















மது மரணத் தூது !

மதுவேண்டாம் மதுவேண்டாம் மனிதனே!
மதுவேண்டாம் மதுவேண்டாம் மறந்திடு!
மரணம்தான் மரணம்தான் மதுவாலே!
மரணம்தான் மரணம்தான் குடிக்காதே!

அய்யய்யோ அய்யய்யோ உயிரைப் பறிக்குமே!
அய்யய்யோ அய்யய்யோ உறவுந் துடிக்குமே!
பொய்யில்லை பொய்யில்லை விசமாகுமே!
பொய்யில்லை பொய்யில்லை நிசமாகுமே!

குடிக்கிறாய் குடிக்கிறாய் உனைத் தானுமே !
குடிக்கிறாய் குடிக்கிறாய் தனைத் தானுமே!
துடிக்கிறாய் துடிக்கிறாய் உனக் குள்ளுமே!
துடிக்கிறாய் துடிக்கிறாய் நரகம் உள்ளுமே!

கரைக்குதே கரைக்குதே உனைக்கொல்லவே!
கரைக்குதே கரைக்குதே குழிதள்ளவே!
மறைக்குதே மறைக்குதே நிலை எண்ணவே!
மறைக்குதே மறைக்குதே உடல் தின்னவே!

சாகிறாய் சாகிறாய் தினம் சாகிறாய்!
சாகிறாய் சாகிறாய் சணம் சாகிறாய்.!
வேகிறாய் வேகிறாய் தினம் வேகிறாய்!
வேகிறாய் வேகிறாய் சணம் வேகிறாய்!

அழிஞ்சதே அழிஞ்சதே குடும்பம் அழிஞ்சதே!
அழிஞ்சதே அழிஞ்சதே குணமும் அழிஞ்சதே!
தொலைஞ்சதே தொலைஞ்சதே நாணம் தொலைஞ்சதே!
தொலைஞ்சதே தொலைஞ்சதே மானம் தொலைஞ்சதே!

ஆக்குதே ஆக்குதே நோய் ஆக்குதே
ஆக்குதே ஆக்குதே சீ ஆக்குதே!
ஆக்குதே ஆக்குதே கோட்டி ஆக்குதே!
ஆக்குதே ஆக்குதே ஓட்டை ஆக்குதே!

போகுதே போகுதே நலம் போகுதே!
போகுதே போகுதே வளம் போகுதே!
போகுதே போகுதே உரம் போகுதே!
போகுதே போகுதே உயிர் போகுதே!

வேகுதே வேகுதே சுகம் வேகுதே!
வேகுதே வேகுதே அகம் வேகுதே!
வேகுதே வேகுதே கடன் வேகுதே!
வேகுதே வேகுதே உடல் வேகுதே!

ஆகுதே ஆகுதே நாள் ஆகுதே!
ஆகுதே ஆகுதே பாழ் ஆகுதே!
ஆகுதே ஆகுதே எமன் ஆகுதே
ஆகுதே ஆகுதே முடிவாகுதே!

கொ.பெ.பி.அய்யா.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggFrPX1Md1HKzW0MDaLFm_D7UwC7_dwzPOE8RuANmhJexIaTY6jx5GnpsYp1x5plCQmHrEjZrLM23PjsbUVFJTMW37G4DFTt-hOaURo7o48bmTIgKonHUMsovKiGmL0TKhUFyi8KEuyrM/s1600/936589_687570547940118_1814710525_n.jpg

No comments:

Post a Comment