மாயமென்ன செய்தாய்?
சேலை கட்டி வந்தவளே!
செருகுகிறாய் முந்தானை!
வேலை கெட்டு வந்தேனே!
வேட்டி கட்ட மறந்தேனே!
மாலை மயங்கி சாயுதே!
மதியும் மயங்கி ஓயுதே!
என்ன மாயம் செய்கிறாய்!
என்னை நானே மறக்கிறேன்!
வேளை போன வேளையே
வேர்க்குதேனோ தெரியல!.
ஆளையேதோ பண்ணுதே.
அடுத்தும் என்ன ஆவேனோ!
கால்கள் இரண்டும் ஆடல.
கடந்து செல்ல முடியல.
கண்கள் இரண்டும் காணல.
காண வேறுந் தோணல.
மனசுந்தான் தொலைந்ததோ!
மறந்தேன் நானே என்னையே.!
நட்ட மரமாய் ஆகினேன்.
நடப்பதென்ன புரியல!
சோலைக்குயிலும் பாடுது.
சசுகமாய் மனது இனிக்குது.
அதுவும் கூட நீ பாடும்
அழைப்புப் பாட்டாய் கேட்குது..
சிட்டுகள் இரண்டுக் கிளையிலே
ஒட்டி ஒன்றாய்க் கூடுது.
அதுவும் கூட நம் காதல்
ஆழம் அதனை ரசிக்குது.
தோகைமயில் விரித்தங்கே
மேகம் கண்டு ஆடுது..
அதுவும் கூட நீயென்னை
அணைப்பதாக இருக்குது.
வேளை வரும் நாளையே
வேண்டி நானும் போகிறேன்.
நாளை வருவேன் நம்பியே!
நம்பும் காதல் உண்மையே!
கொ.பெ.பி.அய்யா.
.
No comments:
Post a Comment