Sunday, 22 December 2013

விமர்சனம் ......கட்டுரை.

நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டு கோள்.
========================================

கருத்தும் விமர்சனமும்.
---------------------------------------
கருத்தும் விமர்சனமும் இரட்டைப்பிறவிகள் போல் தோன்றலாம்.ஆனாலும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.கருத்துக்கூறுவது எளிதானது. விமர்சனம் என்பதுச் சற்றுச் சிக்கல்
ஆனது.கருத்தோ! விமர்சனமோ! எதுவானாலும் சொல்லப்படும் படைப்பின் ஆன்மா
என்ன பேசுகிறது என்பதைப் புரிந்துக் கொண்டு எழுதும் போதுதான் அந்தக் கருத்தும்
விமர்சனமும் ஆக்கம் பெறும்.படைப்பென்றாலே அதற்கு உயிர் உண்டு.அது இயற்கையின்
படைப்போ!செயற்கையின் படைப்போ!எதுவானாலும் இயங்கும் அத்தனைக்கும் உயிர்
உண்டு.அது போன்றே எழுதப்படும் படைப்புக்களுக்கும்.உயிர் உண்டு.உயிர் உள்ள
எழுத்துக்கள் மட்டுமே இலக்கியமாக இயக்கம் பெறுகின்றன. ஆகவே ஒருக் கவிதையில்
உயிர் எந்தவிடத்தில் துடிக்கறதோ அதுதான் கவிதையின் மூல்க்கரு என்பதைக் கண்டறிந்து
அதைச் சூழ்ந்தேக் கருத்தும் விமர்சனமும் அமைதல் வேண்டும்.

சிலப்படைப்புக்கள் வெளிப்படைப்பாகவே விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சிலப்படைப்புக்கள் உட்பொதிந்தப் பொருளுடையதாக இருக்கும் அதுப் படைப்பபாளியின்
உணர்வைப் பொருத்திருக்கும்.அவ்வாறானப் படைப்புக்களை ஒருமுறைக்கு இருமுறைப்
படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.வேறு வேலை இல்லையாக்கும் எனும் அவசரம்
உள்ளவர்கள் இந்த வேலையைத்தள்ளிவிடலாம்.ஏனெனில் இதை ஒரு வேலையெனக்
கருதாமல் கடமையெனக்கருதிப் பொறுமையுடன்,பொறுப்புடன்,ஆர்வமுடன் செய்திடல்
வேண்டியதும் அவசியமாகும்.

சிலர் படைப்பினைப் படித்துப் பார்க்காமலயே கட்டாயத்தில் மொய் எழுதும் பாங்கில்
ஒப்புக்குச்சப்பாக அருமை,சிறப்பு,நன்று அல்லது ஓர் ஒற்றைச்சொல் வழக்கமான ஏக
வசனத்தில் எழுதிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.அப்படிக்கூறுவதுக் கருத்தே அல்ல.அதற்குச்
சொல்லாமல் இருப்பதேச்சுகமாகும்.சரிக்கருத்துக்கும் விமர்சனத்திற்கும் உள்ள வேற்றுமைக்
காண்போம்.

கருத்து.
------------
கருத்து என்பது மேலோட்டமானது.இதுப்பாராட்டும் விதமாகவோ அல்லதுத் தட்டிக்கொடுத்து
ஊக்குவிப்பதாகவோ இருப்பது அவசியம்.மேலும் படைப்பிலுள்ளப் பிழைத்திருத்தங்களைக்
கவனமாகப் படைப்பாளியின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து  நளினமாகத்திருத்தி வளர்க்கும்
விதமாக இதுவா,அதுவா,இப்படி இருப்பின் நலமாக இருக்குமா ,மீள் பார்வை செய்யலாமே,
இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாமே,இன்னும் எழுதுவீர் போன்ற கொஞ்சும் மொழியில்
பகிர்தல் வேண்டும்.அதுவும் முதலில் நிறைகளைச் செப்பிப் பின் திருத்தங்கள் மொழிதல்
வேண்டும்.பொதுவாக்ககருத்துக் கவியை ஒட்டியதாக இருத்தல் மிகமிக அவசியமாகும்.

விமர்சனம்.
-------------------
இதுச் சற்றுச் சிக்கலான விடயம்.அதை ஆராய்ந்துதான் தளமும் விமர்சனம் எனும் இடத்தை
விலக்கி வைத்துள்ளது. ஏனெனில் விமர்சனம் செய்வதற்கு நிறைந்த அனுபவம் பயிற்சி
வேண்டும்.ஒரு படைப்பை விமர்சிக்கும் முன் நிறைகளப்பாராட்ட மூளையை  அதிகமாகக்
கசக்க வேண்டியதில்லை.ஆனால் குறைக்ளச்சுட்டுவதற்குத் தேவையான முன்னறிவு
வேண்டும்.மேற்கோள்கள் காட்டத் தெளிந்திருக்க வேண்டும்.அதற்கான ஆதாரங்கள் தேடித்
திரட்டவேண்டும்.ஏனெனில் படைப்பாளியின் எதிர்த்தாக்குதலைத்தாக்குப் பிடிக்கும் சமாளிப்புக்கு நம்மிடம் தற்காப்புக்குத்தேவையானத் தகுந்த ஆயுதங்கள் தயார் நிலையில்
இருத்தல் மிகமிக அவசியம். ஏனெனில் வாதம் செய்வதும் ஒருவிதமான யுத்தம்தான்.
அதனால்தான் அதனைச் சொற்போர் என்பார்கள்.ஏனெனில் அறிஞர்கள் அவரவர் நிலையை
நிலை நாட்டவேண்டும் என்பதில் வலிமையுள்ளவர்களாகவே இருப்பார்கள்.ஆகையால்
கருத்தைக்கவனமில்லாமல் விமர்சனமாக்கி வீணாக மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இவ்விரண்டிற்கும் வேற்றுமைக்காட்டி எனக்குத்தெளிந்த அறிவில் கூறிக் கவனம் காக்க வேண்டினேன்.
நன்றி
அன்பன்.கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment