திருமண
வாழ்த்து
அன்று தொட்டு இறைவன் துணையாய்
இன்று தொட்டுதாமும் இணையாய்
இருமனம் கலந்து ஒருமனம் காதலாய்
திருமணம் நிரைந்த தெய்வீக ஈதலாய்
தினமும் வாழ்கவே!
இன்று தொட்டுதாமும் இணையாய்
இருமனம் கலந்து ஒருமனம் காதலாய்
திருமணம் நிரைந்த தெய்வீக ஈதலாய்
தினமும் வாழ்கவே!
சொர்கத்தின் பதிவிது புதிய உறவும்
வர்கத்தின் வரவிது தமிழன் மரபும்
பதியின்
இணையும் சதியின் துணையும்
மதியின்
வளர்வும் நிறைந்தும்தாம்
மாண்புற
வாழ்கவே!
மென்மையும்
திண்மையும் இணைந்தும்
உண்மையும்
நன்மையும் பிணைந்தும்.
ஒண்மையும்
தண்மையும் துணையெனும்
பெண்மையும்
ஆண்மையும் அணைந்தும்
வளமுற
வாழ்கவே!
பயனுறு
செல்வம் பதினாறும் பெற்றும்
இயனுறு
நலமும் இனிதே உற்றும்
நயனுறு
நன்னூல் மங்களம் ஏற்றும்
வியனுற
வாழ்வே வாழ்ந்தே போற்றும்
இல்லறம்
வாழ்கவே!
பெண்ணால் தொடரும் பெண்ணாள் அவளால்
நன்னாள் வளரும் தன்னால் தழையும்.
கண்ணால் துலங்கும் பொன்னாள் விளங்கும்
எந்நாளும் வாழ்கவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment