Thursday, 19 December 2013

எங்கிருந்தோ ஒரு குரல்!

எங்கிருந்தோ பாடும் குரல்

எங்கிருந்தோ பாடும் குரல்
எந்தன் செவித் தொடுவதென்ன?
இங்கிருந்து தேடும் நெஞ்சம் 
அங்கு வுன்னைக் கூடாதென்ன?

உன் பாட்டுக் கேட்ட பின்னே
என் பாட்டு மறந்தேனே!
என்ன அங்கே நடக்குதடி ?
எந்தன் நெஞ்சம் துடிக்குதடி.!

அக்கம் பக்கம் பார்க்க வேண்டாம்.
அடுத்த பேச்சும் கேட்க வேண்டாம்.
பொழுது போக்கு லீலைகளை
பொருட்டாக்கிக் கொள்ளவேண்டாம்.

வெட்டிக் கூட்டம் வீண் கேலி
சுட்டிச் சொல் தீய மொழி
தட்டி விட்டுத் தூரம் தள்ளி
விட்டு விட்டு பாரு வழி!

சண்டைக் குணம் சாசுவதம்
கொண்ட எந்தன் பிறவித்தனம்.
மண்டை யதுப் பாழும் மடம்
கண்டு கொண்டேன் வாழும் விதம்.

இருவருக்கும் எல்லைக் கோடு
ஒருவருக்கும் இல்லை பாடு.
கணக் கென்ன அன்போடு!
பிணக் கென்ன நம்மோடு!

கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment