Saturday, 21 December 2013

உணர்வே கனவு.

கனவுகளை அழைக்கிறேன்.

உணர்வுகளை உசுப்பிவிட
கனவுகளை அழைக்கிறேன்.
கனவுகளை எழுப்பிவிட
நினைவுகளை வேண்டுகிறேன்.
நினைவுகளை மலரவிட
மனதினைக் கேட்கிறேன்.
மனததனைத் தூங்கவிட
மனிதனையே கெஞ்சிறேன்.

விட்டுச் சென்ற அன்னையும்
விதிப்படியே போனாளோ!
தொட்டில் பாட்டுப் பாடியும்
தூக்கம் தர வருவாளோ!
கட்டில் துணை மனையாளும்
கண்ணீரைத் துடைத்தாளும்
கட்டையிது வேகும் மட்டும்
கருவறையை மறந்திடுமோ!

பொய்யான உலகமிதில்
புகழுக்கு ஏங்குகிறார்.
மெய்யென்றால் என்னவென
மெலிந்தாரைக் கேட்கிறார்.
வைத்திருந்தால் சொத்துபத்து
வரலாறும் படைக்கலாம்.
கைவலுத்தான் கிறுக்கினாலும்
காவியங்கள் ஆகலாம்.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment