இன்றுங்கூடக் குளத்து நீரா?
மேல்நிலை நீர்த் தொட்டி.
கீழ்நிலை பார் எட்டி.
நிற்பது ஏன் சும்மாவே--தாகம்
தீர்ப்பதுதான் எப்போதோ!
மேல்நிலை நீர்த் தொட்டி.
கீழ்நிலை பார் எட்டி.
நிற்பது ஏன் சும்மாவே--தாகம்
தீர்ப்பதுதான் எப்போதோ!
மழை நீரைச் சேகரித்தோம்.
மழை நீரைக் குடிகின்றோம்..
இழந்ததோ சுகாதாரம்--தேடி
அலைந்ததோ வெகுதூரம்.
கூட்டுக் குடி நீரேற்றி.
கூடு கட்டிய வான்தொட்டி.
கூடு கட்டிய வான்தொட்டி.
பாட்டுத்தான் சோகராகம்--பயன்
பாடில்லா பாவ சாபம்.
தூத்துக்குடி பக்கந்தான்
தொண்மையான கிராமந்தான்
கொல்லம்பரம்பு மக்கள்தான்--குடிக்க
நல்லநீர் கேட்கிறோம்
சுதந்திரத் தியாகிகள்
சுற்றத்தில் வாழ்ந்திட்ட
ஒட் டப்பிடாரம் வட்டந்தான்--உழைத்த
உரிமை யோடு கேட்கிறோம்.
கட்டபொம்மன் சிதம்பரனார்
குட்டுக்கவி பாரதியார்
தொட்டமண் தூத்துக்குடி---தியாக
வட்டத்திற்கே இக்கதியோ!
சுதந்திரம் வாங்கிவிட்டோம்
சூட்டி விட்டோம் வைரமாலை
இன்றுங்கூடக் குளத்து நீரா?---இதுதான்
எங்கள் தலைவிதியோ!
எங்கள் தலைவிதியோ!
மேல்நிலைத் தொட்டியோ!
மேலேதான் பார்வையோ?
கீழே நின்று கெஞ்சுகிறோம்--நெஞ்சம்
கிஞ்சித்தும கசியாயோ?.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment