வானமும்
நாணுமோ!
"அச்சச்சோ..
அடிவானம்
இப்படிச்
சிவந்து
கிடக்குதே.
என்னாகிப்
போச்சு.....?
ஏனென்று
கேட்டால்
கோணிக்
குனிகிறது.
அப்படியே
மாடியை
நோக்கினேன்...............!
அடடா
இதுதான்
அதுவா?
அவள்
அங்கே
சிக்கெடுக்கும்
அழகைக்
கண்டுதான்
நாணிச்
சிவந்தாயோ வானமே!....
சிரிக்கியின் சிரிப்பிலே !
சிதறிய முத்துக்களை
பொருக்கி நீ பரப்பித்தான்
பூவனம் செய்தாயோ!
நீ வானம்!
நிலவென்ன நினது நெற்றிப்பொட்டா?
களவாடினாயோ அவள் கண்துயில்கையில்!
காலை வெய்யில் உன் வண்ணமோ!
மாலை மஞ்சள் உன் எண்ணமோ!
நீலப்பட்டாடையில்
நீயும் கூட அழகுதான்.
கோலப்புட்டாதான்
கொண்டாட்டம் என்ன?
ஆனாலும் அவள் அழகில்--நீ
ஆயிரத்தில் ஒருபங்குதான்.
அதை எண்ணித்தான்
அப்படி நாணிச்சிவந்தாயோ!
கொ.பெ.பி.அய்யா.
சிதறிய முத்துக்களை
பொருக்கி நீ பரப்பித்தான்
பூவனம் செய்தாயோ!
நீ வானம்!
நிலவென்ன நினது நெற்றிப்பொட்டா?
களவாடினாயோ அவள் கண்துயில்கையில்!
காலை வெய்யில் உன் வண்ணமோ!
மாலை மஞ்சள் உன் எண்ணமோ!
நீயும் கூட அழகுதான்.
கோலப்புட்டாதான்
கொண்டாட்டம் என்ன?
ஆனாலும் அவள் அழகில்--நீ
ஆயிரத்தில் ஒருபங்குதான்.
அதை எண்ணித்தான்
அப்படி நாணிச்சிவந்தாயோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment