பொறுமை
இழந்து பொங்கி எழுந்த தீ!
மாணவர்களின்
போராட்டத் தீ !
யாராலும்
பற்றிப் பரவியதல்ல.
தானாகே
பற்றிக்கொண்ட
உணர்வுத்
தீ அது !
.
உணர்ச்சியின்
உரசல்கள் பீச்சிய
தீப்பொறி
களால் பற்றிய தீ அது.
பற்றவைக்கப்பட்டதல்ல
பற்றிக்கொண்ட
தீ அது !.
காட்டுத்
தீயுங்கட்டுப்படும்.
காற்றுத்
தீ யாருக்குக் கட்டுப்படும்!
இரத்தங்
கொதித்த வெப்பக்காற்றால்
விளைந்த
தீ அது !..
யாராலும் அணைக்க இயலாத
தீ !
எவராலும்
அடக்கவும் முடியாத தீ !
பொறுமையிழந்து பொங்கியெழுந்த தீ !
வறுமைக்கும்
வாடாத வளருந் தீ !
பரவட்டும் தீ !
வெப்பம்
வெந்து கொலைகாரன்
ஒப்புக்கொள்ளும்வரை
பரவட்டும்
தீ !
ஒப்புக்குச்சப்பான
அமெரிகாத்தீர்மானம்
திருத்தப்ப்படும்வரை
பரவட்டும் தீ !
No comments:
Post a Comment