எங்கே
தேடுவேன்?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
இறைவன்
கொடுத்த அற்புதக்
கொடையை--
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
அறமாய் வாழ்ந்து உரமாய் வீழ்ந்த
மறவர் செந்நீர் மண்ணிலா?
மறவர் செந்நீர் மண்ணிலா?
கனிவாய் அன்பில் உறவாய் வாழ்ந்த
புனிதர் சொல்லிய மறையிலா?
புனிதர் சொல்லிய மறையிலா?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
அருவம் ஆகவே ஆயும் ஆற்றல்
திறமை மனிதன் படைப்பிலா?
திறமை மனிதன் படைப்பிலா?
இறைவனாகவே
இயக்கம் அருளும்
புலமை ஆறின் அறிவிலா?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
எண்ணம்
ஏவல் ஈவின் இரக்கம்
வண்ணம் அன்பின் செயலிலா?
திண்ணம் ஊக்கம் தெளியுமுணர்வு
உண்மை நன்மை புரிவிலா?
உண்மை நன்மை புரிவிலா?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
ஒழுகும்
முறையும் ஓதும் நலமும்
பழகும்
விதமும் பரிவிலா?
அழகும்
ஆய்ந்தும் நிலவும் உலகும்
வழமை ஆற்றும் தெரிவிலா?
வழமை ஆற்றும் தெரிவிலா?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
ஔவியம் அதுவாம் செவ்விய ஆண்மை
பௌவியம் காக்கும் நெறியிலா?.
திவ்வியம் பொதுவாம் ஒவ்விய மேன்மை
இவ்வியம் போற்றும் அழகிலா?
இவ்வியம் போற்றும் அழகிலா?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
புத்தியும்
சித்தியும் சத்தியம் ஆகும்
சக்தியும் உத்தம நிலையிலா?
முக்திக்கு
வழியும் முன்னே ஆகும்
பக்தியின் முறையும் கலையிலா?
பக்தியின் முறையும் கலையிலா?
எங்கே
தேடுவேன் மனதை
எங்கே
தேடுவேன்?
ஆன்மா
அதுதான் நானென அறியும்
ஆழ்ந்த நித்திய தவத்திலா?.
தானே விளங்கும் தன்னில் ஒளிரும்
மோனே ஒருமை நிசத்திலா?
என்னில்
தேடுவேன் மனதை
எண்ணில் தேடுவேன்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment