Sunday, 22 December 2013

காகிதப்பூக்கள்.

பொய்யோ!நிசமோ!

காகிதப் பூக்கள் அங்கே
கடவுளின் சன்னிதானத்தில்!
நிசப் பூக்கள் இங்கே
நீசனின் காலடி நிழலில்!

பொய்கள் அங்கே போகுதோ
பொற்தேரில் ஊர்கோலம் !
மெய்கள் இங்கே கிடக்குதோ
மௌனமாய் சவக்கோலம்!

பொய்களில் வாழும் வீணரை
புரவலரென்று போற்றுகிறோம்.
மெய்யில் தொலைந்து பொய்யில் 
விழைந்துதான் சாகிறோம்.

பூவையர் கூட ரோசாவை
பூத்ததைச் சூடுவதில்லை.
வண்ணம் பூசிச்செய்ததை
வாங்கிச் செருகுகிறார்..

விளம்பரத்தில் மயக்கியே
விலையைக் கூட்டுகிறார்.
தரமற்ற பொருளைத்தந்து
தலையிலே கட்டுகிறார்.

தந்திரம் செய்வாரெல்லாம்
தன்னிலை உயர்கிறார்..
எந்திரம் ஆனோரெல்லாம்
இத்துயித்தேத் தேய்கிறார்.

பொய்யோ!நிசமோ!பார்த்து
புரிந்திடப் பழகுங்கள்.
உழைத்ததைக் காத்து வைத்து
உருப்படத் துணியுங்கள்.

கொ.பெ.பி.அய்யா





No comments:

Post a Comment