பாட்டு ஒன்றும் பாடட்டுமோ!
குயில் எதுக்குப் பாடுவதோ!
மயில் எதுக்கு ஆடுவதோ!
மனம் மகிழும் சோலை இதோ!
மனம் விரும்பும் காதல் அதோ!
என்ன அது இலக்கணமோ!
இருக்கும் அந்தக் கலைகளுக்கோ!
என்னக் குறை இருந்திடுமோ!
எண்ணம் அதில்
நிறையாதோ!
அதிர்வலை அசைவானால்
அசைவொலி இசைவானால்
இசைச்
சீர்கள் அளவானால்
இனிக்கும் சந்தம் இராகமாகும்.
குயில் பாட்டு பாடியதோ!
மயில் ஆட்டம்
ஆடியதோ!
எவரிடம் பயின்றதோ!
இயற்கைதான் குருவானதோ!
பழகக் கலை
வாராதோ!
உலகு அதை ஏற்காதோ!!
பிறவியின் வரமாமோ!
இறைவனின் அருளாமோ!
மரபு வழி அறிவாமோ!
மனம் பழகிக்
கூடாதோ!
உறவு
மொழி பழகாதோ!
உணர்வுக் கவி வரையாதோ!
பாட்டு ஒன்றும்
பாடட்டுமோ!
பாடிக் கொண்டும் எழுதட்டுமோ!
இசை உடைவும் சொல்லாதோ!
இலக்கணமும் கல்லாதோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment